Ramboda Falls

இயற்கை பிரியர்களான உங்களுக்கு ஓர் அழகிய இடம்.. 

ரம்போட நீர்வீழ்ச்சியானது 109 மீட்டர் (358 அடி) உயரமும், இலங்கையில் 11 வது மிக உயரமான நீர்வீழ்ச்சியும், உலகில் 729 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியும் ஆகும்.  

இந்  நீர்வீழ்ச்சியானது  A5 நெடுஞ்சாலையில் ரம்போட பாஸில் புஸ்ஸெல்லாவா எனும் ஊர்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது கொத்மலே ஓயாவின் துணை நதியான பன்னா ஓயாவில் இருந்து உருவெடுக்கப்பட்டு ரம்போட நீர்வீழ்ச்சியாக பிரதிபலிக்கின்றது .

இந்நீர்வீழ்ச்சியின் உயரமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 945 மீட்டர் (3,100 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.இந்  நீர்வீழ்ச்சியானது கண்டி நகரிலிருந்து 60Km தூரத்திலும் கொழும்பு நகரிலிருந்து 173Km தூரத்திலும் மட்டக்களப்பு நகரிலிருந்து  213Km தூரத்திலும் அம்பாறை நகரிலிருந்து 206Km தூரத்திலும் அமைந்துள்ளது. 

நுவரெலியா நகருக்கு செல்கின்ற உங்களுக்கு இதனை பார்வையிடுவது மிகவும் சுலாபமாக அமையும்.  இது நுவரெலியா நகரிலிருந்து 25Km தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனை பார்வையிடுவதற்காக வௌிநாட்டவர்கள் ஏராளமாக வந்து செல்கின்றனர். உங்களது வாழ்வில் ஒரு தடவையேனும் நீங்கள் இந்த இடத்திற்கு சென்று உங்கள் வாழ்நாள் அனுபவ குறிப்பில் குறித்துக் கொள்ளுங்கள்...

A beautiful place for you nature lovers.

Ramboda Falls is 109 meters (358 feet) high, the 11th highest waterfall in Sri Lanka and the 729th highest in the world.The waterfall is located on the A5 highway in the eastern part of Pussellawa in Ramboda Basil.

It originates from the Panna Oya, a tributary of the Kotmale Oya and represents the Ramboda Falls. The height of the falls is about 945 meters (3,100 feet) above sea level. This waterfall is located 60 km from Kandy City, 173 km from Colombo City, 213 km from Batticaloa and 206 km from Ampara City.

It will be very easy for you to visit if you are going to Nuwara Eliya. It is located 25Km from Nuwara Eliya City. Many foreigners come to visit this place. You should go to this place at least once in your life and Keep notes of what you learned from this place....

Post a Comment

2 Comments