நீராடுவதற்கும், சேர்பிங்(Surfing) செய்வதற்கும், இரவு நேர தங்குகைக்கும் ஏற்றவாறான ஓர் சிறப்பான இடம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்தில், பொத்துவில், பானம பகுதியில் அமைந்துள்ள இவ்விடமானது பொத்துவில் நகரிலிருந்து சரியாக 12Km தூரத்தில் அமைந்துள்ளது.
இவ்விடமானது அதீத இயற்கை காட்சியுடனும் அழகிய கடற்கரையினையும் கொண்டதாகவுள்ளது. நாங்கள் இவ்விடத்திற்கு பகல் பொழுதில் பொத்துவில் நகரிலிருந்து எங்களுக்கு தேவையான அனைத்துவிதமான உணவுகளையும் பெற்றுக் கொண்டு சென்றிருந்தோம்.
செல்லும் பாதையினை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு சிறிது தாமதம் ஏற்பட்டது ஏனென்றால் பாதையானது பானம பகுதியினை அடையும் ஆரம்ப பகுதியிலிருந்து இடதுபுறமாகவுள்ள குளத்தின் பக்கமாக இறங்கியவாறு குளத்தின் ஓரம் பாரிய நிலப்பரப்பு வழியாக செல்கின்ற பாதையினூடாக செல்ல வேண்டும். அங்குள்ள ஓட்டோ சாரதிகளுக்கு இந்த பாதை வழக்கப்பட்ட ஒன்றாகும். இங்கு இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இங்கு வௌிநாட்டவர்கள் கடலில் சேர்பிங்(Surfing) செய்வதற்காகவே அதிகமாக வருகின்றாரகள். கடலின் அருகே அழகான மலைக்குன்றுகள் காணப்படுகின்றது அதன் மேல் ஏறி அதிகமானவர்கள் தங்களது புகைப்பட ஆர்வக் கலையினை தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள்.
பிறகு நாங்கள் கடலில் நீராடிவிட்டு இரவு நேர BBQ போடுவதற்கான ஏற்பாட்டை மேற் கொண்டு எங்கள் இராப் பொழுதினை மிக மிக சிறப்பாக கழித்து காலையில் அங்கிருந்து புறப்பட்டோம். பகல், மாலை பொழுதுகளில் குடும்பத்துடனும் இராப் பொழுதுகளில் நண்பர்களுடன் செல்வீர்களாயின் இந்த இடம் உங்களுக்கு மிகவும் வெகுமதியாக அமையும்.
Google Translation.
Ideal for swimming, surfing and overnight stays.
It is located in the Pottuvil, Panama area in the Ampara District of the Eastern Province of Sri Lanka, exactly 12 km from the city of Pottuvil.
The place has an extremely scenic view and a beautiful beach. We went to this place during the day to get all the food we needed from the city in pottuvil.
0 Comments