ஒலுவில், நிந்தவூர் பிரதேங்களினூடாக செல்பவர்களுக்கு இரசனை மிகு இடங்கள்.
ஒலுவில், நிந்தவூர், மல்கம்பிட்டி பிரதேங்களின் வயல்வௌிகளில் அமைந்துள்ள இவ்விடங்களானது ஒலுவில் வழியாக கல்ஓயா நதியின் பிரதான முடிவிடத்திலும் மல்கம்பிட்டி, நிந்தவூர் வழியாக கல்ஓயா நதியின் கிளையின் பகுதியிலும் அமைந்துள்ள இவ்விடமானது இயற்கையை ரசிப்பதற்கு ஓர் சிறந்த இடமாகும்.
ஒவ்வொரு படத்தினையும் Click செய்து அதற்கான Location இனை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டாயம் சென்று இவ்விடத்தினை பார்த்து ரசியுங்கள் .
இவ்விடங்ளானது மதிய நேர சமையல் சமைப்பதற்கும் குடும்பங்களுடன் சென்று மகிழ்வுடன் இயற்கையின் அழகினை ரசிப்பதற்கும் இவ்விடங்களானது மிகவும் சிறப்பான தரமான இடமாகும்.
குளிப்பதற்கு இவ்விடங்களானது ஆபத்தானதாகும். முதலைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இவ்விடங்களுக்கு வயல் அறுவடை செய்கின்ற காலங்களில் செல்வீர்களாயின் அதிகளவான யானைக் கூட்டங்களினையும் காணமுடியும்.
இயற்கை அழகினை பாதுகாக்கும் முகமாக இங்கு குப்பைகளை போடுவதனையும்
சாப்பாட்டினை வீசுவதனையும் நாம் தவிரத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இயற்கையை பாதுகாப்பது எமது கடமையாகும்.
Google Translation
0 Comments