Pimburattawa Tank

மாதுரு ஓயா அணைக்கு அருகில் அமைந்துள்ள (அணையிலிருந்து சுமார் 10Km) இந்த இடமானது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விடுமுறைக்கு சென்று ரசிக்க சிறந்த இடமும் நீராடுவதற்கும் பாதுகாப்பான இடமாகும். 
 

இலங்கையின் வட மத்திய மாகாணத்தின், பொலன்னருவை மாவட்டத்தில் அமைந்துள்ள பிம்புரத்தேவா ஏரியானது 32Km நீளத்தினை கொண்டுள்ளது. இது பிரதான நகரமான மட்டக்களப்பிலிருந்து 90Km தூரத்தில் அமைந்துள்ளது. மழை காலத்தில் இந்த ஏரி நிரம்பி வழியும் அழகோ தனி. கொழும்பு மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டிய சந்தியினூடாக 29Km பயணித்து இந்த இடத்தினை அடைய முடியும். இது இலங்கையின் அழகிய தேசிய பூங்காவான மாதுரு ஓயாவிக்கு அருகில் அமைந்துள்ளது.

 

குளத்தில் முழுமையாக நீர் நிரம்பும் போது நீர்த்தொட்டியானது நிரம்பி வழியும் காட்சியானது உங்களை மிகவும் பிரம்மிக்கச்செய்யும். வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களை அனுபவிப்பதற்கு மிகச்சிறந்த இடமாகும்.

அணையினுடைய​ தனித்துவம் மற்றும் அதன் வடிவமைப்பின் காரணமாக இவ்விடமானது மிகவும் சுவாரஸ்யமாக காணப்படுகிறது. அணையை அடைய நீங்கள் இரண்டு சாலைகளில் செல்லலாம் முதலாவது பாதை மிகவும் சேற்றுப்பாதையாகும் அது மிகவும் வழுக்ககூடியதாகும் இரண்டாவது பாதை அதை விட சிறந்ததாகும் அங்குள்ளவர்களிடம் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இங்கு மாலை நேரங்களில் காட்டு யானைகள் வருவதால் பாதுகாப்பானதாக இல்லை. எனவே நீங்கள் காலை பொழுதுகளில் சென்று அங்குள்ள காட்சிகளை ரசித்தும் நீராடிவிட்டும் வரலாம்.
 
Google Translation.

Situated close to the Mathuru Oya Dam (about 10Km from the dam), this place is an ideal place for family and friends to go on holiday and enjoy a safe place to swim.

Lake Pimburadeva Lake is located in the Polonnaruwa District of the North Central Province of Sri Lanka and is 32 km long. It is located 90 km from the main city of Batticaloa. During the rainy season, the lake overflows and becomes beautiful. This place can be reached by traveling 29 km through the Mannampitiya junction on the Colombo-Batticaloa road. It is located close to Mathuru Oyavi, a beautiful national park in Sri Lanka.

When the pool is completely full of water, the view of the tank overflowing will amaze you. Great place to enjoy weekends or holidays.

The place is very interesting due to the uniqueness of the dam and its design. You can go two ways to reach the dam. The first route is very muddy and it is very slippery and the second route is better than that.

It is not safe for wild elephants to come here in the evenings. So you can go in the morning and enjoy the views there and take a dip.

Post a Comment

6 Comments

Thank you so Much for your Comment
Unknown said…
Nice article & enjoyed
Thank you so Much for your Comment
Thank you so Much for your Comment