Himidurawa Mini Waterfal

இலங்கை எனும் ஓர் குட்டித் தீவில் கிழக்கில் அம்பாறையில் ஒரு அழகான ஏரியனையும் அதனுடனான சிறிய நீர்வீழ்ச்சியனையும் கண்டுகளியுங்கள்.

அம்பாறை நகரில் இருந்து வெறுமனே 21Km🏍 தூரத்தில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு பொலன்னறுவை, கண்டி வழியாக வந்தடைவதற்கு உங்களுக்கு இரண்டு வழிகள் காணப்படுகின்றதுஇதில் மிகவும் அழகிய பாதை கண்டி வழிப் பாதையாகும். நீங்கள் கொழும்பிலிருந்து இங்கு செல்வதாயின் சுமார் 8 மணிநேரம் தேவைப்படும் எனவே நீங்கள் இதற்கு கொழும்பிலிருந்து இரவில் பயணத்தினை தொடங்கி காலையில் இந்த ஏரியினை கண்டுகளிக்கலாம். 

மீன்பாடும் தேநாடான மட்டுமா நகரில் உள்ளவர்கள் தங்கள் காலை உணவினை கொண்டுவந்து இங்கு ஏரியின் அழகை ரசித்த வண்ணம் உண்டு மகிழலாம்.

  • மட்டக்களப்பில் இருந்து - களுவாஞ்சிகுடி ஊடாக - 72Km

  • பொலன்னறுவையில் இருந்து - மகாஓயா ஊடாக - 131Km

  • கண்டியில் இருந்து - பிபிலை ஊடாக - 186Km.

இங்கு பகல் வேளைகளில் வருபவர்கள் தங்கள் மதிய உணவினை சமைத்து சாப்பிடுவதற்கான இடங்களும் உள்ளது. அத்தோடு இயற்கை அழகினை பாதுகாக்கும்முகமாக அங்கு குப்பைகளை போடுவதனையும் சாப்பாட்டினை வீசுவதனையும் நாம் தவிரத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இயற்கையை பாதுகாப்பது எமது கடமையாகும்

உள்ளூர் மக்களுடன் பேசுவதன் மூலம் நீங்கள் படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற ஏற்பாடுகளினை செய்யலாம். இந்த ஏரி காலையில் சூரிய உதயத்தில் பார்க்க ஒர் அழகான காட்சியாகவும் மாலைப் பொழுது வேளைகளில் பிரம்மிக்க வைக்கும் காட்சிகளாகவும் அதிகளவான பறவைகளினை பார்ப்பதற்கும் ஏற்ற இடமாகவும் அமையும்.

Google Translation  

Discover a beautiful Lake and a Small waterfall in Ampara, East of a small Island called Sri Lanka. It is located at a distance of 21 km from Ampara. There are two ways to reach Himidurawa Lake via Polonnaruwa and Kandy. The most beautiful route is the Kandy route. 

It takes about 8 hours to reach Colombo from Colombo so you can start your night trek from Colombo and explore the lake in the morning.

  • From Batticaloa - via Kaluwanchikudi - 72Km 

  • From Polonnaruwa - via Mahaoya - 131Km 

  • From Kandy - via Bibile - 186Km.

Batticaloa People bring your breakfast to this place and enjoy the beauty of the lake.   There are also places for those who come here during the day to cook and eat their lunch. We also need to avoid littering and throwing food in order to preserve our natural beauty. Because it is our duty to protect nature. The lake is a beautiful place to watch the sunrise in the morning and dazzle in the evening and is also a great place to see a large number of birds.

Post a Comment

3 Comments

Thank you so Much for your Comment
Unknown said…
Nice article & enjoyed