இலங்கையின் ஊவா மாகாணத்தின், பதுளை மாவட்டத்தில், கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், பிரதான நகரமான கொஸ்லந்தாவிருந்து 5Km தூரத்திலும் வெல்லவாயவிலிருந்து 13.5Km தூரத்திலும் பதுளையிலிருந்து 61Km தூரத்திலும் தியலும நீர்வீழ்ச்சியானது அமைந்துள்ளது.
தியலும நீர்வீழ்ச்சியானது 220 மீட்டர் (720 அடி) உயரமும், இலங்கையின் இரண்டாவது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியும், உலகின் 361 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியும் ஆகும்.
தியலும நீர்வீழ்ச்சியானது மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. கொழும்பு – மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலை வழியில் நீங்கள் பயணிக்கும் போதே அதை நீங்கள் அழகாக பார்க்க முடியும்.
இந்த நீர்வீழ்ச்சியின் அடிப் பகுதியில் குளிப்பது ஆபத்தானதாக அமையலாம் ஏனெனில் மேலே இருந்து குப்பைகள் மற்றும் கற்கல் விழும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் அடிவாரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியின் உயரத்தில் ஏறுவது ஒரு ஆபத்தான செயலாகும். அதற்காகவே நீர்வீழ்ச்சியின் உச்சியை அடையவதற்கு மாற்று வழிகள் காணப்படுகின்றது.
நீர்வீழ்ச்சியின் உச்சியை அடையவதற்கான வழி
இந்த நீர்வீழ்ச்சியின் அடிப் பகுதியான பிரதான வீதியிலிருந்து 4Km தூரம் கொஸ்லந்தாவினை நோக்கி கடந்தவுடன் அங்கு வலது புறமாக ஒரு சிறிய பெட்டிக் கடையின் அருகே Upper Diyaluma/ Uda Diyaluma என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்திலிருந்து நீங்கள் மேலே செல்வதற்கு உங்கள் வாகனத்தினை பயன்படுத்த முடியும். (வேன், கார், மோட்டார் சைக்கில்) என்பன பொருத்தமானதாக அமையும். பாதையை பின்பற்றி செல்லும் போது அங்கு உங்கள் வாகனங்களினை பார்க்(Park) செய்துகொள்வதற்கு பாரிய அளவிலான இடம் ஒன்று ஒதுக்கப்படுள்ளது. அங்கு நுழைவு கட்டணம் மற்றும் பாரக்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை.
அங்கிருந்துதான் நீங்கள் உங்களுடைய நடை பயணத்தினை ஆரம்பிக்க வேண்டும். நடைபாதையானது நன்றாக காணப்படவில்லை ஆனால் நீங்கள் நடந்து செல்ல முடியும். சில இடங்களில் மரங்களுக்கு கீழாகவும் சிறு குன்றுகளுக்குமேலாகவும் கடந்து கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் தூரம் 45 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். நடந்துசெல்லும் வழிகளில் நாவற்பழங்கள் நிறைந்த மரங்களும் காணப்படுகின்றது. அதனை பறித்தும் உண்ட வண்ணம் நீங்கள் நடக்க ஆரம்பிக்கலாம். மேலே செல்லச் செல்ல மலைத்தொடரின் அழகினை ரசிக்கவும் குளிர் காற்றின் குளிரினை அனுபவிக்கவும் முடியும். மழை காலங்களில் இவ்விடமானது பொறுத்தமானதாக அமையாது.
உண்மையிலேயே இது உங்களுக்கு பாரிய பிரம்மிப்பினையும் அனுபவத்தினையும் ஏற்படுத்தும் என்று நம்புகின்றேன்.
Google Translation.
Diyaluma Falls is located on the Colombo-Batticaloa Highway in the Badulla District of the Uva Province of Sri Lanka, 5 km from the main city Koslanda, 13.5 km from Wellawaya and 61 km from Badulla.
Diyaluma Falls was first formed by the Punagala Oya, a tributary of the Kuda Oya, and the Kirindi Oya, a tributary of the river, flows near Bandarawela and flows through the central hills of Sri Lanka.
Diyaluma Falls is 220 meters (720 feet) high, the second highest waterfall in Sri Lanka and the 361st highest in the world. Diyaluma Falls is one of the most beautiful waterfalls. You can see it beautifully as you travel along the Colombo - Batticaloa main highway.
Bathing at the bottom of this waterfall can be dangerous because of the risk of debris and rocks falling from above. Also climbing to the height of a waterfall from the base is a dangerous act. That is why there are alternative ways to reach the top of the falls.
The way to reach the top of the falls
Banners such as Upper Diyaluma / Uda Diyaluma are placed near a small box store on the right hand side, just 4km from the main road at the base of the falls towards Koslanda.
From there you can use your vehicle to get to the top. (Van, car, motorcycle) would be appropriate. There is ample space to park your vehicles while following the trail. There are no entrance fees or parking fees
3 Comments