Periya Muhattuvaram

கண்கவர் முழு சூரிய உதயத்தினையும், முழு சூரிய அஸ்தமனத்தையும் அனுபவிக்க ஓர் சிறந்த இடம்.

கிழக்கில் அம்பாறையில் தம்பட்டை எனும் ஊரிலுள்ள பெரிய முகத்துவாரமானது (களப்பு) கல்முனை, அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்றினூடாக பொத்துவில் நோக்கி பயணம் செய்கின்றவர்கள் இவ்விடத்தினை கண்டுகளிக்கலாம்.

இங்கு காலை 5.30 – 6.00 மணிவரை அழகிய சூரிய உதயத்தினையும் மீண்டும் மாலையில் 5.30 – 6.00 மணிவரை அழகிய சூரிய அஸ்தமனத்தையும் கண்டுகளிக்கலாம். இங்கு அதிகளவான மீனவர்கள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பதும் அவர்களின் வலை வீச்சுக்களும் பார்ப்பதற்கு அருமையானதாகவே இருக்கும்.

மாலையில் செல்பவர்கள் மீன், இறால் போன்றவற்றினை கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும். இங்கு நீராடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மாலையில் குடும்பத்துடன் செல்பவர்கள் கடலோர காற்றின் வேகமான சப்தத்தினையும் கண்டுகளிக்கலாம்.

மாலையில் சாப்பிடுவதற்கு அருகில் கிருபா டேஸ்ட் கடை ஒன்றுள்ளது அங்கு வடை, மயிர்கிழங்கு சீவல் என்பன பிரமாதமாக இருக்கும். இங்கு பயணம் செய்யும் நீங்கள் தங்களது சாப்பட்டுக் கழிவுகளை வீசுவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏன்என்றால் நாம் எமது எதிர்கால தலைமுறையினருக்காக இவ்விடத்தினை பாதுகாப்பது எமது கடமையாகும்.

 Google Translation.

 Spectacular place to enjoy full sunrise and full sunset.

Periya Muhattuvaram at Thambattai in Ampara in the east. Those who traveling from Kalmunai, Ampara to Pottuvil via Akkaraipattu route can visit this place.

Here you can watch the beautiful sunrise from 5.30 - 6.00 am and the beautiful sunset again from 5.30 - 6.00 pm. More and more fishermen here are fishing on the boat and their nets are fantastic to watch.

Evening travelers can also buy fish and shrimp. Bathing is forbidden here. Those who go with family in the evening can also see the fast sound of the coastal wind.

There is a Kiruba Taste shop nearby for evening food where the wada and chips are fantastic. If you travel here you should avoid throwing away your food waste. Because it is our duty to protect this place for our future generations.

Post a Comment

0 Comments