நுவரெலியா நகருக்கு செல்கின்ற ஒவ்வொருவரும் மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய ஓர் அழகிய நீர்வீழச்சி.
அதிக பனி மூட்டங்களை கொண்ட இயற்கை நீர்வீழச்சியும், அதனுடன் இணைந்த
அழகிய ரயில்வே பாலத்தினையும் கொண்ட நானு ஓயா நீர்வீழச்சியானது நுவரெலியா
நகரிலிருந்து வெறுமனே 10Km தூரத்தில் அமைந்துள்ளது.
நுவரெலியா நகருக்கு செல்கின்ற நீங்கல் நானு ஓயா நீர்வீழச்சியினை கண்டுகளிப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்கிப்பாருங்கள் இவ்விடம் உங்களுக்கு அதீத இன்பத்தினை தரக்கூடும். இது தேயிலைத் தோட்ட மலைப் பகுதிக்கு நடுவே மிகவும் கவர்ச்சிகரமான நீர்வீழ்ச்சிக்கு மேலே குறுக்காக அமைந்துள்ள கருநிறம் கொண்ட ரயில்வே பாலத்தினை கெண்டதாகவும் பார்ப்பதற்கு பிரம்மிப்பினை ஏற்படுத்துவதாகவும் உங்களை ஓர் புகைப்பட கலைஞனாகவும் மாற்றக்கூடும்.
இங்கு நீராடுவது பாதுகாப்பானதாகும், ஆனால் மலை வழுக்கும் தன்மை கொண்டதால் கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீரானது மிகவும் குளிச்சியானதாக காணப்படும். அந்த ரயில்வே பாலத்தின் மேல் ரயில் செல்லும் போது நீங்கள் புகைப்படம் எடுக்கும் வாய்ப்புக் கிடைக்குமாயின் நீங்கள் ஓர் பெரிய அதிஷ்டசாலி ஆவீர்கள்.
இவ்விடத்திற்கு செல்ல நீங்கள் Google Map இனை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல் அங்குள்ள கிராமவாசிகளிடம் கேட்பது சிறந்ததாகும். செல்லும் வழியில் நானு ஓயா புகையிரத நிலையமும் உள்ளது. அதன் அழகினையும் நீங்கள் கண்டுகொள்ளலாம். அங்குள்ள புகையிரத பாதையின் மேல் நடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் பெருமளவான இயற்கை பிரியர்கள் அதன்மேல் நின்று தங்கள் புகைப்பட கலையினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
நீங்களும் இவ்விடத்திற்கு சென்று புதிய அனுபவத்தினை பெற வேண்டும் என நான் ஆசைப்படுகின்றேன்.
Google Translation.
0 Comments