சிறு உலகமுடிவு, மடுல்சீமை
இலங்கையின் ஊவா மாகாணத்தின், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மடுல்சீமையானது பிரதான நகரமான பதுளையிலிருந்து 39Km தூரத்திலும் பிபிலையிலிருந்து 31.5KM தூரத்திலும் அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை அதிகம்
ஈர்க்கும் மிக அழகான சூழலை கொண்ட சிறு
உலகமுடிவானது உள்ளூர் மற்றும்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இரவில் முகாமிட்டு தங்குவற்கு ஏற்ற இடமாகவும் அதன் குளிர் காலநிலையை அனுபவிக்கவும் இங்கு வருகிறார்கள். இந்த இடத்தின் சிறப்பு
என்னவென்றால் விரைவாக மாறிவரும்
வானிலையாகும்.
இங்கு நீங்கள் செல்வதற்கு பசரை வழியாக உங்கள் போக்குவரத்தினை
ஆரம்பியுங்கள் பாதை மிகவும் சீரானதாகும். ஆனால் பிபிலை வழியாக செல்வதாயின் தற்போது
வீதிகள் சரிசெய்யப்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக சற்று அசௌகரியமாக இருக்கலாம்
(16km) வரை. இப் பயணத்தினை நீங்கள் மோட்டார் சைக்கிலில் செல்வீர்களானால்
பெரிதும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.
மடுல்சீமயிலிருந்து சிறு உலகமுடிவுக்கு செல்லும் பாதையானது சிறந்ததாக இருந்தாலும் இடக்கிடையே கடினமான பாதைகளும் உண்டு. மேலே செல்லச் செல்ல காட்சிகள் ஒவ்வொன்றும் எம்மை பிரம்மிக்கச் செய்யும். இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற கண்கவர் காட்சிகளைக் காண்பதற்கே பெருமளவான இயற்கை ரசிகர்கள் வந்துசெல்கின்றனர்.
இந்த இடங்களுக்கு வருபவர்கள் தங்கள் கால்தடங்களை மட்டும் விட்டு புகைப்படங்களை மட்டும் கொண்டு வாருங்கள் இடத்தினை மாசுபடுத்தாதீர்கள் ஏனென்றால் இயற்கை இறைவனின் ஓர் அருட்கொடையாகும். இந்த இடத்தின் மேற்புறத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவல் வழங்ககூடிய கல் ஒன்று உள்ளது அதில் இங்கிருந்து நீங்கள் காணக்கூடிய நகரங்கள் மற்றும் ஏரிகளின் திசையினை குறித்து நிற்கின்றது.
இந்த இடமானது எந்த அதிகாரத்தாலும் நிர்வகிக்கப்படவில்லை. எனவே டிக்கெட் பெற வேண்டிய அவசியமில்லை மற்றும் நீங்கள் இங்கு தங்கும் நேரத்தில் யாரும் தொந்தரவும் செய்ய மாட்டார்கள். இந்த இடம் இன்னும் பயணிகளுக்கு அவ்வளவு பிரபலமாக இல்லை, ஆனால் இந்த அற்புதமான இடத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ரசிகர்கள் பார்வையிட வேண்டும் என்று நினைக்கின்றேன்.
3 Comments