எமது பழமையான காலத்தினை நினைவுபடுத்தக்கூடியதும், மனதிற்கு மிகவும் அமைதியானதும், நகர்ப்புற சலசலப்புகளிலிருந்து விடுபட்டதுமான ஓர் இடம்.
அழகிய ரசிக்கக்கூடிய கண்கவர் காட்சிகளைக் கொண்ட இடமான அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள எக்கல் ஓயா நீர்த்தேக்கமானது அம்பாறையிலிருந்து சியம்பலாந்துவை நோக்கி பயணம் செய்யும் ஒவ்வொருவரும் பாரக்கவேண்டிய முக்கியமான இடமாகும். அம்பாறை நகரிலிருந்து 22Km தூரத்திலும் அக்கரைப்பற்று நகரிலிருந்து 33Km தூரத்திலும் அமைந்துள்ளது.
இந்த இடத்திற்கு பெரும்பாலான பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து ஓய்வு
நேரங்களை கழிக்கவும், நீராடுவதற்கும், சூரியன் மறையும் காட்சியினையும் அனுபவிப்பதற்காகவே
இங்கு வருகின்றனர்.
இங்கு அழகிய கண்கவர் மலைத்தொடர்களும், நீண்ட மலைச்சரிவுகளும், நீர்தொட்டியிலிருந்து நீர் மறுபக்கம் வடிந்தோடும் சலசலவென்ற சத்தங்களும், பறவைகளின் கீச்சிடும் கானங்களும், மெது மெதுவாக நகர்ந்து செல்கின்ற மேகக்கூட்டங்களும் உங்களை ஓர் இயற்கை ரசிகனாகவே மாற்றும்.
இங்கு அணைவழியாக பாதை செல்கின்றது அதில் வேன், கார் போன்ற வாகனங்களினை ஓட்டிச்செல்லாம், அதன்முடிவிடத்தில் வாகனங்கள் திருப்பக்கூடிய இடமும் காணப்படுகின்றது. இங்கு செல்லும் போது உணவுப் பொருட்களை நகர்ப்புறங்களில் அல்லது வீடுகளிலிருந்து கொண்டு வாருங்கள் அருகில் கடைகள் ஏதும் இல்லை.
மாலைப்பொழுதுகளில் யானைகளினை நீர்த்தேக்கத்தின் மறுபக்கங்களில் சுற்றித் திரிவதை காணலாம். இங்கு பயணம் செய்யும் நீங்கள் தங்களது சாப்பட்டுக் கழிவுகளை வீசுவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏன்என்றால் நாம் எமது எதிர்கால தலைமுறையினருக்காக இவ்விடத்தினை பாதுகாப்பது எமது கடமையாகும்.
Google Translation.
0 Comments